×

சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 9 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

நேற்று இரவு பெமேதரா மாவட்டத்தில் உள்ள கதியா கிராமத்திற்கு அருகே, சாலையோரம் லோட் ஏற்றப்பட்ட டிரக் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது, குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த, பயணிகள் இருந்த சரக்கு வாகனம் ஒன்று டிரக்கின் மீது மோதியுள்ளது.

இதில் சரக்கு வாகனத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த சிலர் தலைநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பெமேதரா எம்எல்ஏ தீபேஷ் சாஹு, கலெக்டர் ரன்வீர் சர்மா, எஸ்பி ராமகிருஷ்ண சாஹு ஆகியோர் மாவட்ட மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை சந்தித்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெமேதரா கலெக்டர் ரன்வீர் சர்மா மருத்துவரிடம் பேசி உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்கும்படியும் அதிகாலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பூரி நிஷாத் (50), நீரா சாஹு (55), கீதா சாஹு (60), அக்னியா சாஹு (60), குஷ்பூ சாஹு (39), மது சாஹு (5), ரிகேஷ் நிஷாத் (6), ட்விங்கிள் நிஷாத் (6) ஆகியோர் அடங்குவர். விபத்தில் பலியானவர்கள் அனைவரும் பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

The post சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Bhimadara ,Bemedara ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில்...